13404 பதவிகளை நிரப்பும் அறிவிப்பு

71976பார்த்தது
13404 பதவிகளை நிரப்பும் அறிவிப்பு
இந்தியா முழுவதும் உள்ள மத்திய வித்யாலயா பள்ளிகளில் உள்ள 13,404 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இந்த வேலைக்கு இன்று முதல் டிசம்பர் 26ம் தேதி வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். இதில் ஆரம்ப பள்ளி ஆசிரியர் பதவிக்கு 6414 காலிப்பணியிடங்கள், பள்ளி முதல்வர் 239 காலிப்பணியிடங்கள், பள்ளி துணை முதல்வர் 203 காலிப்பணியிடங்கள், பிஜிடி 1409 காலிப்பணியிடங்கள், டிஜிடி 3176 காலிப்பணியிடங்கள், நூலகர் 355 காலிப்பணியிடங்கள், உதவி ஆணையர் 52 காலிப்பணியிடங்கள், பிஆர்டி இசை 303 காலிப்பணியிடங்கள், நிதி அலுவலர் 6 காலிப்பணியிடங்கள், உதவிப் பொறியாளர் 2 காலிப்பணியிடங்கள், உதவிப் பிரிவு அலுவலர் 156 காலிப்பணியிடங்கள், ஹிந்தி மொழிபெயர்ப்பாளர் 11 காலிப்பணியிடங்கள், UDC 322 காலிப்பணியிடங்கள், ஜூனியர் செயலக உதவியாளர் 702 காலிப்பணியிடங்கள், ஸ்டெனோகிராபர் கிரேடு 2-54 காலிப்பணியிடங்கள், பதவியைப் பொறுத்து, பத்தாம் வகுப்பு, 12 ஆம் வகுப்பு, டிகிரி, BED, PG, BPED, டிப்ளமோ, பிஜி டிப்ளமோ, சிஏ, ஐசிடபிள்யூஏ ஆகிய கல்விதகுதிகள் பெற்றிருக்க வேண்டும். முழுமையான விவரங்களை அறிய https://kvsangathan.nic.in/ என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.
Job Suitcase

Jobs near you