கன்னியாகுமரியில் நடந்த ஆர்.எஸ்.எஸ். பேரணியை தொடங்கி வைத்ததால் கட்சியின் அமைப்புச் செயலாளர் மற்றும் மாவட்டச் செயலாளர் பதவியில் இருந்து அதிமுக முன்னாள் அமைச்சர் தளவாய் சுந்தரம் நீக்கப்பட்டுள்ளார். இது குறித்து செய்தியாளர்கள் அவரிடம் கேட்ட போது, “தொகுதி எம்.எல்.ஏ. என்ற முறையில் பேரணியை தொடங்கி வைத்தேன். நீக்கப்பட்டுவிட்டால் ஓகே ரைட் என சொல்ல வேண்டியது தான், கட்சி நடவடிக்கையால் கவலையில்லை” என்றார்.