ராஜினாமா செய்யவில்லை - இமாச்சல் முதல்வர் விளக்கம்

53பார்த்தது
ராஜினாமா செய்யவில்லை - இமாச்சல் முதல்வர் விளக்கம்
இமாச்சல பிரதேச காங்கிரஸ் முதல்வர் சுக்வீந்தர் சிங் சுக்கு தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டதாக தகவல் பரவியது. இந்நிலையில் அவர் இதுகுறித்து விளக்கம் அளித்துள்ளார். அதில், நான் ஒன்றை தெளிவாக கூறிக்கொள்கிறேன். நான் எனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்யவில்லை. மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி 5 ஆண்டுகளை நிறைவு செய்யும். இடையூறுகளை எதிர்த்து சண்டையிட்டு மாநிலத்தில் பெரும்பான்மையை நிரூபிப்போம் என உறுதியாக கூறினார்.

தொடர்புடைய செய்தி