விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கவில்லை - இபிஎஸ்

53பார்த்தது
விலைவாசி உயர்வை  கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கவில்லை - இபிஎஸ்
மத்திய, மாநில அரசுகள் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கவில்லை என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார். சேலத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், பாஜக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு பெட்ரோல், டீசல் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை குறைந்தும் பெட்ரோல், டீசல் விலையை மத்திய பாஜக அரசு குறைக்கவில்லை. அத்தியாவசிய பொருட்கள் விலைக் கடுமையாக உயர்ந்துள்ளது. சட்டமன்றத் தேர்தலின் போது அளித்த வாக்குறுதிகளை திமுக அரசு இதுவரை முழுமையாக நிறைவேற்றவில்லை. திமுக அளித்த வாக்குறுதிகளில் 10%-க்கும் குறைவான அறிவிப்புகளை மட்டும் தான் நிறைவேற்றப்பட்டுள்ளன என்றார்.

தொடர்புடைய செய்தி