தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகிக்கும் முக்கிய தலைவரும், தற்போது மோடியை பிரதமர் ஆக்கும் இரு கிங் மேக்கர்களில் ஒருவருமான பீஹார் முதல்வர் நிதிஷ் குமாரை பாஜக தேசிய துணை தலைவர் திலீப் கோஷ் கடுமையான வார்த்தைகளை உபயோகப்படுத்தி விமர்சித்திருக்கிறார். "நிதிஷ் குமார், சந்திரபாபு நாயுடு இருவருமே பல்டி மாமாக்கள், நிதீஷ் குமாரையும் சந்திரபாபு நாயுடுவையும் நம்பினால் அவர்கள் முதுகில் குத்தி விடுவார்கள்” என்று விமர்சித்தார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.