உலக தற்கொலை விழிப்புணர்வு பேரணி

83பார்த்தது
உலக தற்கொலை தடுப்பு தினத்தை முன்னிட்டு உதகையில் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை சார்பில் நேற்று (செப்.,10) விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

தற்கொலை சம்பவங்களை தடுக்க உலகளவில் நடவடிக்கை எடுப்பது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் செப்டம்பர் 10ம் தேதி அனுசரிக்கப்படுகிறது. அகால மரணத்திற்கு தற்கொலை ஒரு முக்கிய தடுக்கக்கூடிய காரணம் என்பதை மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இந்நாளில் பல நடவடிக்கைகள் மேற்க்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்நிலையில் நேற்று (செப்.,10) உதகை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை சார்பில் தற்கொலை தடுப்பு தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இந்த விழிப்புணர்வு பேரணியை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் கீதாஞ்சலி கொடியசைத்து துவக்கி வைத்தார்.

உதகை சேரிங்கிராஸ் பகுதியில் துவங்கிய இந்த விழிப்புணர்வு பேரணியில் அரசு மருத்துவக் கல்லூரி செவிலியர்கள் மற்றும் மருத்துவக் கல்லூரி மாணவ, மாணவிகள் என சுமார் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். சேரிங்கிராஸ் பகுதியில் துவங்கிய இப்பேரணி கமர்சியல் சாலை, காபி ஹவுஸ் சதுக்கம் வழியாக அரசு மகப்பேறு மருத்துவமனையில் நிறைவடைந்தது.

தொடர்புடைய செய்தி