சீருடை வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்த அமைச்சர்

81பார்த்தது
நீலகிரி மாவட்டத்தில் உள்ள 522 பள்ளிகளில் பயிலும் 20, 042 மாணவ, மாணவிகளுக்கு இலவச சீருடை வழங்கும் திட்டத்தை சுற்றுலா துறை அமைச்சர் கா. ராமசந்திரன் தொடங்கி வைத்தார்.



நீலகிரி மாவட்டம், உதகை ஊராட்சி ஒன்றியம், தொட்டபெட்டா ஊராட்சி, ஓடைக்காடு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் சார்பில் நடைபெற்ற இலவச சீருடை வழங்கும் நிகழ்ச்சியில் சுற்றுலாத்துறை அமைச்சர் கா. ராமச்சந்திரன் கலந்துகொண்டார். நிகழ்ச்சியில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா சீரூடைகளை வழங்கினார்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி