காவல் பணியுடன் மக்கள்பணி

51பார்த்தது
காவல் பணியுடன் மக்கள்பணி சுற்றுலா பயணிகளின் பாராட்டில் காவலர் கேண்டீன்

தமிழ்நாடு அரசு காவல்துறையின் சார்பாக நீலகிரி மாவட்டம் உதகையில் காவலர் கேண்டீன் 2 இடங்களில் மிக சிறப்பாக செயல்பட்டு வருகிறது.
உதகை B1 காவல் நிலையம் மற்றும் அரசு தாவரவியல் பூங்கா அருகே செயல்பட்டு வரும் , இந்த காவலர் கேண்டீனில் சுவையான தரமான உணவுகள் மலிவு விலையில் விற்கபட்டு வருகின்றன
சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்களின் வசதிக்காக டீ, காபி மற்றும் உதகை வர்க்கி, சாக்லேட் உள்ளிட்டவைகளும் இங்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
மற்ற உணவகங்கள் மற்றும் கடைகளை காட்டிலும் குறைந்த விலையில் விற்கபடுகிறது லாப நோக்கமில்லாமல் மக்கள் பயன் பெறும் வகையில் இவைகள் செயல்பட்டு வருகின்ற
இங்கு டீ ஐந்து ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. காபி 10 சாக்லேட் 100 வர்க்கி 80 அரை கிலோ டீதூள் முதல் தரம் 200 விற்கப்படுகிறது. மேலும் வடை உள்ளிட்டவையெல்லாம் 5 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
இன்று முழு அடைப்பு காரணமாக உணவகங்கள் கடைகள் அடைக்க பட்டு உள்ள நிலையில் காவலர் உணவங்களில் குறைந்த விலைக்கு விற்பனை செய்வது சுற்றுலா பயணிகளுக்கு மிகவும் உபயோகமாக இருப்பதாக சுற்றுலா பயணிகள் மகிழ்சியும் பாராட்டுகளையும் காவல்துறையினருக்கு தெரிவித்தனர்

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி