மத்திய பேருந்து நிலையம் ஆர்ப்பாட்டம்...

81பார்த்தது
நீலகிரி மாவட்டம் உதகை மத்திய பேருந்து நிலையம் முன்பு விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் மாவட்ட தலைவர் புவனேஸ்வரன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாட்டில் சமீபத்தில் சென்னை உள்ளிட்ட தென் மாவட்டங்களில் பெய்த பெரும் மழை வெள்ள சேதத்தை தீவிர தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டும், தமிழ்நாடு அரசு கேட்கும் வெள்ள சேத நிவாரண தொகையான ரூபாய் 21, 000 கோடியை மத்திய அரசு உடனே வழங்க வேண்டும், வாக்குப்பதிவு இயந்திரத்தில் முறைகேடு நடக்க வாய்ப்பு இருப்பதால் மின்னணு வாக்குப்பதிவு இயந்திர நடைமுறையை கைவிட்டு மீண்டும் வாக்கு சீட்டு முறையினை இந்திய தேர்தல் ஆணையம் நடைமுறைப்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து கோஷங்கள் எழுப்பப்பட்டன. இந்த ஆர்ப்பாட்டத்தில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி