நீலகிரி: தானியங்கி கேமரா பொருத்தும் பணியில் வனத்துறை தீவிரம்

65பார்த்தது
நீலகிரி மாவட்டம் உதகை அருகேயுள்ள கொள்ளிக்கோடு மந்து வனப்பகுதியில் கல்லக்கொரை மந்து பகுதியை சேர்ந்த தோடர் பழங்குடியின மக்களான கேந்தர் குட்டன் என்பவரை வனவிலங்கு தாக்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தையும், அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது. 

இந்நிலையில் பழங்குடியின இளைஞரை வனவிலங்கு தாக்கி கொன்ற பகுதியில் 15 தானியங்கி கேமிராக்கள் பொருத்தப்பட்டு வனவிலங்கின் நடமாட்டத்தை கண்காணிக்கும் பணியில் வனத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இதனைத் தொடர்ந்து மாவட்ட வனத்துறை அலுவலர் தெரிவித்தபோது, நேற்று முன்தினம் விறகு சேகரிப்பதற்காக அருகிலுள்ள வனப்பகுதிக்குச் சென்றபோது வனவிலங்கு தாக்கி உயிரிழந்துள்ளார். அவரை தாக்கியது புலியா, சிறுத்தையா என கண்காணித்து வருவதாகவும், 15 இடங்களில் கண்காணிப்பு கேமிராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிப்பு பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாகவும், அப்பகுதியில் தனியாக யாரும் செல்லக் கூடாது எனவும், இரவு நேரங்களில் வெளியே செல்வதைத் தவிர்க்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும், புலியின் நடமாட்டத்தை கண்காணிக்க சிறப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டு 24 மணி நேரமும் 30 பேர் கொண்ட 3 குழுக்களாகப் பிரிக்கப்பட்டு வனத்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டு வருவதாக தெரிவித்தார்.

தொடர்புடைய செய்தி