மழை பொழிவால் தேயிலை சாகுபடி அமோகம்... விவசாயிகள் மகிழ்ச்சி.

68பார்த்தது
தொடர் மழை பொழிவால் தேயிலை சாகுபடி அமோகம் விவசாயிகள் மகிழ்ச்சி

நீலகிரி மாவட்டத்தின் பிரதான தொழிலாக தேயிலை விவசாயம் உள்ளது. ஊட்டி குன்னூர் கூடலூர் மஞ்சூர் ஆகிய பகுதிகளை சுற்றியுள்ள இடங்களில் அதிக அளவில் தேயிலை தோட்டங்கள் தான் தென்படுகின்றது.

பொதுவாகவே நவம்பர் டிசம்பர் மாதங்களில் பனிப்பொழிவு ஏற்படும் நிலையில் பனியின் தாக்கத்தால் தோட்டத்தில் உள்ள இலைகள் பழுப்பு நிறமாக மாறிவிடும். அதன் பின்னர் உள்ளூர் விவசாயிகளுக்கும் தேயிலைத் துயிலை நம்பி உள்ள பணியாளர்களுக்கும் பணிகள் ஏதும் இன்றி வீடுகளில் முடங்கும் நிலை ஏற்படும்.

சமீப தினங்களாக பொழிந்து வரும் மழையின் காரணமாக தேயிலை தோட்டங்களில் பசுமை திரும்பி உள்ளது. இதனால் உள்ளூர் தேயிலை விவசாயிகள் மற்றும் தேயிலை பணிகளுக்கு செல்பவர்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

மழை பொழியும் நாட்களில் மழை பொழிவிற்கு பிறகு எருவுரமிட்டு அதன் மீது மழை பொழிந்தால் தேயிலை தோட்டங்களில் இலைகள் சிறப்பாக வளரும். அதன் பின்னர் பசுமையான தெரியலைகளால் மக்களின் வாழ்க்கையும் பசுமையாக இருக்கும் என கருத்து தெரிவிக்கின்றனர் விவசாயிகள்.

ஆனால் சிறந்த மகசூல் இருந்தும் சொல்லும் அளவிற்கு விலை போகாமல் உள்ளதால் தேயிலை விவசாயத்தில் குறைந்தபட்சமாக ரூபாய் 20 க்கும் மேல் விலை கிடைத்தால் மகிழ்ச்சியாக இருக்கும் எனவும் தெரிவிக்கின்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி