அதிக மேகமூட்டத்தால் பொதுமக்கள் அவதி

1547பார்த்தது
நீலகிரி மாவட்டத்தில் மீண்டும் துவங்கியது மழை அதிக மேகமூட்டத்தால் வாகன ஓட்டிகள் அவதி பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு.

நீலகிரி மாவட்டம் குன்னூர் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று இரவு முதல் மீண்டும் மழை பெய்ய துவங்கியுள்ளதால் அதிக மேகமூட்டம் காணப்படுகிறது இதனால் எதிரே வரும் வாகனங்களை கண்டறிய வாகன ஓட்டிகள் முகப்பு விளக்குகள் மற்றும் திசை விளக்குகள் எரிய விட்டு வாகனங்களை இயக்குகின்றனர் தொடர்ந்து சாரல் மழை பெய்து வருவதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பிற்குள்ளாகியுள்ளது வானிலை ஆராய்ச்சி மையம் ஏற்கனவே நீலகிரி மாவட்டத்தில் 4, 5, தேதிகளில் மழை பெய்யக்கூடும் என அறிவிப்பு விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி