கிளாம்பாக்கம் ரயில் நிலையம் - நிதி ஒதுக்கியது சிஎம்டிஏ!

55பார்த்தது
கிளாம்பாக்கம் ரயில் நிலையம் - நிதி ஒதுக்கியது சிஎம்டிஏ!
கிளாம்பாக்கத்தில் சமீபத்தில் புதிய பேருந்து நிலையம் திறக்கப்பட்டது. இந்நிலையில் பயணிகளின் வசதிக்காக கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் அருகில் ரயில் நிலையம் அமைக்க முடிவுசெய்யப்பட்டது. மாநில அரசின் நிதியில் இந்த ரயில் நிலையம் கட்டப்பட உள்ளது. இதற்காக முதற்கட்டமாக ரூ.20 கோடியை மாநில அரசு ஒதுக்கியுள்ளது. கிளாம்பாக்கம் ரயில் நிலையம் மாநிலத்தின் தேவையாக இருப்பதால் நிதி வழங்கியுள்ளது சிஎம்டிஏ. ஓராண்டுக்குள் பணிகளை நிறைவு செய்யும் வகையில் இந்த வாரத்தில் டெண்டர் கோருகிறது ரயில்வே வாரியம்; அடுத்தடுத்து ஆகும் செலவுகளை கணக்கில் கொண்டு மேற்கொண்டு சிஎம்டிஏ நிதி ஒதுக்கீடு செய்யும் என தெரிகிறது.

தொடர்புடைய செய்தி