பேண்ட் பாக்கெட்டில் இருந்த மொபைல் வெடித்ததால் பரபரப்பு

58823பார்த்தது
பேண்ட் பாக்கெட்டில் இருந்த மொபைல் வெடித்ததால் பரபரப்பு
பெங்களூருவில் உள்ள ஒயிட்ஃபீல்டில் இளைஞர் ஒருவரின் பேண்ட் பாக்கெட்டில் இருந்த செல்போன் வெடித்து சிதறியது. பிரசாத் என்ற இளைஞர் ஒன் பிளஸ் போனை பாக்கெட்டில் வைத்துக்கொண்டு பைக்கில் சென்று கொண்டிருந்த போது அது வெடித்து சிதறியது. இதனால், அவரது தொடையில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனடியாக மருத்துவமனையில் சேர்ந்த நிலையில், சிகிச்சைக்கு ரூ.4 லட்சம் செலவாகும் என மருத்துவர்கள் தெரிவித்தனர். இதுகுறித்து பாதிக்கப்பட்டவர், அந்த நிறுவன ஷோரூமை தொடர்பு கொண்டு கேட்டபோது, ​​மருத்துவ செலவு மற்றும் மொபைல் சேதம் தொடர்பான தொகையை ஏற்பதாக உறுதியளித்ததாக தெரிகிறது.

தொடர்புடைய செய்தி