ஜெகன்மோகன் ரெட்டியின் சகோதரி காங்கிரஸில் இணைந்தார்...

50233பார்த்தது
ஆந்திர முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டியின் சகோதரி ஒய்.எஸ்.ஷர்மிளா காங்கிரஸ் கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டார். ஒய்எஸ்ஆர் தெலுங்கானா கட்சியின் நிறுவனர் ஒய்.எஸ்.ஷர்மிளா, டெல்லியில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே மற்றும் ராகுல்காந்தி முன்னிலையில் இணைந்தார். அவருக்கு கட்சி துண்டு அணிவித்து, பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர். ஷர்மிளாவிற்கும் அவரது சகோதரர் ஜெகன்மோகன் ரெட்டிக்கும் இடையே ஏற்பட்ட மோதலின் காரணமாக, ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியில் இருந்து பிரிந்து ஒய்எஸ்ஆர் தெலுங்கானா கட்சியை 2021ஆம் ஆண்டு தொடங்கினார். 2023ஆம் ஆண்டு தெலுங்கானா சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட முடிவு செய்த ஷர்மிளா, பின்னர் காங்கிரஸுக்கு தனது ஆதரவை வழங்கினார். இந்த நிலையில், தன்னுடைய ஒய்எஸ்ஆர் தெலுங்கானா கட்சியையும் காங்கிரஸ் உடன் இணைத்துக் கொண்டார்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி