தோடர் பழங்குடியினர் மக்கள் பயன்படுத்திய சாலையை ஆக்கிரமிப்பு

85பார்த்தது
நீலகிரி மாவட்டம் உதகை - கூடலூர் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள டி ஆர் பஜார் பகுதியில் உள்ள அடர்ந்த மலை மீது அமைந்துள்ளது கரிகல் மந்து. இங்கு பத்துக்கும் மேற்பட்ட தோடர் பழங்குடியின மக்கள் ஆங்கிலேயர் ஆட்சிக் காலம் முதல் விவசாயம் மேற்கொண்டு வருகின்றனர். இவர்கள் வசிக்கும் பகுதிக்கு செல்ல நடுவட்டம் பேரூராட்சியின் பழைய சாலை உள்ள நிலையில் இந்த சாலையில் 100 மீட்டர் அளவிற்கு தங்களது சாலை என ஆக்கிரமித்துக் கொண்ட பிரபல தேயிலை நிறுவனம் ஒன்று பழங்குடியினர் மக்களை வழியாக வாகனத்தில் செல்ல விடாமல், அவர்கள் விளைவிக்கும் பொருட்களை எடுத்து வர விடாமல் இரண்டு வாகனங்களை சாலையில் குறுக்கே நிறுத்தி தடுத்து வருகிறது. இதனால் தோடர் பழங்குடியின மக்கள் அறுவடை செய்துள்ள கேரட் , வெள்ளைப்பூண்டு போன்ற பொருட்களை சந்தை படுத்த முடியாமல் தவித்து வருவதால் மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல் துறையினர் இவர்கள் மீது நடவடிக்கை எடுத்து சாலையை பயன்படுத்த அனுமதிக்குமாறு பழங்குடியின மக்கள் நடுவட்டம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். நூற்றாண்டை கிடந்து கரிசல் மந்து பழங்குடியினர் கிராமத்திற்கு செல்லும் சாலையை பயன்படுத்தி வந்த நிலையில் தனியார் தேயிலை தோட்ட நிறுவனம் 100 மீட்டர் சாலையை ஆக்கிரமித்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி