உதகையில் இயங்கி வரும் தனியார் ஆங்கில ஆண்கள் பள்ளிக்கு வெளிநாட்டிலிருந்து கிறிஸ்தவ அமைப்புகள் நடத்தும் பள்ளிகளுக்கு இமெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல், மிரட்டலைத் தொடர்ந்து உதகையில் உள்ள பிரபல பள்ளி வளாகத்தில் மாவட்ட காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் தலைமையில் இரண்டு மோப்பநாய் உதவியுடன் இரண்டு வெடிகுண்டு நிபுணர்கள் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
நீலகிரி மாவட்டம் உதகை அருகே உள்ள ஃபார்ன்ஹில் செல்லும் சாலையில் கிறிஸ்தவ அமைப்புகள் நடத்தும் தனியார் ஆங்கில பள்ளி இயங்கி வருகிறது. இப்பள்ளியில் தமிழகம் மட்டுமல்லாமல் அண்டை மாநிலங்களான கேரளா, கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த மாணவர்கள் பயின்று வருகின்றனர்.
இந்த நிலையில் பள்ளியில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக பள்ளியின் மின்னஞ்சலுக்கு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதால் இது தொடர்பாக பள்ளி நிர்வாகம் மாவட்ட காவல் துறைக்கு தகவல் அளித்ததன் பேரில். இன்று காலை இரண்டு முறைபள்ளியின் மின்னஞ்சலுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால் மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் தலைமையில் பள்ளியில் இரண்டு மோப்ப நாய்கள் உதவியுடன் இரண்டு வெடிகுண்டு நிபுணர்கள் மற்றும் காவல் துறையினர் பள்ளி வளாகம் மற்றும் வகுப்பறைகளில் வாகனங்களில் தீவிர சோதனை மேற்கொண்டனர்.