அதிமுக மாவட்ட செயலாளர் நேரில் ஆய்வு

50பார்த்தது
நீலகிரிமாவட்டம்
குன்னூர் தீயனைப்பு துறையின் அலட்சியமே மார்க்கெட்டில் 20 கடைகள் எரிந்து 5 கோடி இழப்பு ஏற்பட காரணம் என அதிமுக மாவட்ட செயலாளர் கப்பச்சி வினோத் குற்றச்சாட்டு.
நீலகிரி மாவட்டம்
குன்னூர் மார்க்கெட் பகுதியில் தீ விபத்து ஏற்பட்டு 20 க்கு மேற்பட்ட கடைகள் எரிந்த சேதமடைந்ததை இதில் 5 கோடிக்கும் மேல் இழப்பு ஏற்பட்டிருக்கலாம். இதனை திமுக மாவட்ட செயலாளர் KM ராஜு மற்றும், அதிமுக மாவட்ட செயலாளர் கப்பச்சி வினோத் நேரில் சென்று தனித்தனியாக பார்வையிட்டு கடை உரிமையாளர்களுக்கு ஆறுதல் கூறினார்கள் இதில் அதிமுக மாவட்ட செயலாளர் கப்பச்சி வினோத் செய்தியாளர்களிடம் பேசுகையில் குன்னூர் தீயனைப்பு வாகனத்தில் போதிய தண்ணீர் இருந்திருந்தால் ஒரு கடை எரியும் போதே அனைத்திருக்கலாம் மேலும் தீயனைப்பு வாகனத்தில் குறைவான தண்ணீர் டேங்கில் இருந்ததால் தீயை கட்டுப்படுத்த முடியாமல்
வெலிங்டன் இராணுவ மையம் மற்றும் அருவங்காடு வெடிமருந்து தொழிற்சாலையில் இருந்து மேலும் ஊட்டியில் இருந்தும் தீயனைப்பு வாகனங்கள் வரவில்லை என்றால் அனைத்து கடைகளும் எரிந்து நாசமாயிருக்கும் இந்த பெரிய விபத்துக்கு தீயனைப்புத்துறையினரின் அலட்சிய போக்கே காரணம் என குற்றம் சாட்டினார். இந்த ஆய்வில் குன்னூர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சாந்தி A ராமுஆகியோர் உடன் இருந்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி