கோவை: 7-இடங்களில் மலை ஏற்றத்திற்கு அனுமதி
கோவை மாவட்டத்தில் தமிழக அரசு 7 இடங்களில் மலையேற்றத்திற்கு அனுமதி வழங்கியுள்ளது. தமிழ்நாடு மலையேற்ற திட்டத்தை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் அக்டோபர் 24 அன்று தொடங்கி வைத்தார். இத்திட்டத்தின் கீழ் தமிழகத்தில் 40 இடங்களில் மலையேற்றம் அனுமதிக்கப்பட்டுள்ளது. மலையேற்றங்களை ஆன்லைனில் முன்பதிவு செய்ய www. trektamilnadu. com என்ற பிரத்யேக இணையதளம் தொடங்கப்பட்டுள்ளது. மலையேற்றப் பாதைகள் எளிதானவை, மிதமானவை, கடினமானவை என 3 வகைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. இதில், 14 மலையேற்றப் பாதைகள் எளிதானவை மற்றும் மிதமானவை, 12 வழிகள் கடினமானவை. வனத்துறையினர் இது குறித்து இன்று கூறுகையில், கோவை மாவட்டத்தில் தலா 2 எளிதான மற்றும் மிதமான மலையேற்றங்களுக்கும், 3 கடினமான மலையேற்றங்களுக்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. முன்பதிவு www. trektamilnadu. com இல் செய்யப்பட வேண்டும். இந்த இணையதளத்தில் மலையேற்றத்தின் போது பின்பற்ற வேண்டியவை பற்றிய முழுமையான தகவல்கள், வீடியோக்கள், புகைப்படங்கள் மற்றும் கட்டணங்கள் ஆகியவை அடங்கும். மலையேற்றம் செல்ல விரும்புபவர்கள் இதைப் பயன்படுத்தலாம் என்று கூறியுள்ளனர்.