நிஃபா வைரஸ்: தமிழகத்தின் ஆய்வு தேவையற்றது!

82பார்த்தது
நிஃபா வைரஸ்:  தமிழகத்தின் ஆய்வு தேவையற்றது!
கேரள எல்லையில் தமிழகம் நடத்தும் நிஃபா ஆய்வுக்கு எதிராக அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் கருத்து தெரிவித்துள்ளார். கூடலூர் நாடுகாணி, கோவை சாவடி ஆகிய இடங்களில் சோதனை தொடர்ந்து நடக்கிறது. காய்ச்சல் அறிகுறியுள்ள பயணிகளின் உடல்நிலையை பரிசோதித்த பிறகே கேரளாவில் இருந்து வருவோர் தமிழகத்திற்குள் அனுமதிக்கப்படுகின்றனர். கேரளா சரியான தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதால் தமிழகம் நடத்தும் ஆய்வு தேவையற்றது என அமைச்சர் வீணா ஜார்ஜ் கூறினார்.

தொடர்புடைய செய்தி