பிரேசிலைச் சேர்ந்த 19 வயதான லிவியா வொய்ட், உலகின் மிக இளம் கோடீஸ்வரராக வரலாறு படைத்துள்ளார். இவர் பல ஆயிரம் கோடி ரூபாய்க்கு அதிபதியாக இருக்கிறார். ஃபோர்ப்ஸ் நாளிதழ் வெளியிட்ட செய்தியின்படி சுமார் ரூ.9,165 கோடி சொத்துக்களுடன் 33 வயதுக்குட்பட்ட 25 இளம் பில்லியனர்கள் பட்டியலில் லிவியா சேர்க்கப்பட்டுள்ளார். பிரேசிலை தலைமையகமாக கொண்ட மின்சார மோட்டார்கள் தயாரிப்பாளரான WEG இண்டஸ்ட்ரீஸின் முன்னணி பங்குதாரராக லிவியா இருக்கிறார்.