தவெக தலைவர் விஜய்யின் அரசியல் ஆலோசகராக மத்திய அரசு ஊழியர் அருள்ராஜ் IRS செயல்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. அரசு ஊழியர், அரசியல் கட்சி தலைவருக்காக வேலை செய்வது எந்த விதத்தில் நியாயம்? மத்திய அரசிற்கு இவ்விஷயம் தெரியுமா அல்லது தெரிந்தும் அமைதியாக இருக்கிறதா என அருள்ராஜின் சக ஊழியர்கள் கேள்வியெழுப்பியுள்ளனர். மேலும், மத்திய அரசு உடனே தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என போராட்டம் நடத்த ஆயத்தமாகி வருகின்றனர்.