கோவை காளப்பட்டியில் உள்ள NGP கலைக் கல்லூரி மாணவன் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 3 மாணவர்கள் சேர்ந்து மாணவர் சத்தியநாராயணாவை பிராங்க் செய்து தாக்கியதில் அச்சம் அடைந்து விபரீத முடிவு எனத் தகவல் வெளியாகியுள்ளது. சக மாணவர்களின் கொடுமை தாங்காமல், திருப்பூரில் உள்ள தனது வீட்டில் மாணவன் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் குறித்து திருப்பூர் நல்லூர் காவல் நிலைய போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.