ஆட்டுக்கறி விருந்து.. ஆண்கள் மட்டும் பங்கேற்பு

59பார்த்தது
மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே கரும்பாறை முத்தையா சுவாமி கோவிலில் ஆண்கள் மட்டும் பங்கேற்ற அசைவ உணவு திருவிழா நடைபெற்றது. ஆட்டு இறைச்சி குழம்பு முதலில் சாமிக்கு படைத்து பூஜை செய்யப்பட்டன. பின்னர் பக்தர்களுக்கு அன்னதானமாக வழங்கப்பட்டது. இந்த கறி விருந்தில் பல்வேறு கிராமங்களில் இருந்து சுமார் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் கலந்து கொண்டனர். சாதம், கறி குழம்பு என வரிசையாக பரிமாறப்பட்டு விருந்து விமர்ச்சையாக நடைபெற்றது.

நன்றி: NewsTamilTV24x7

தொடர்புடைய செய்தி