நீட் முறைகேடு- கவுன்சிலிங் நடத்த தடையில்லை!

58பார்த்தது
நீட் முறைகேடு- கவுன்சிலிங் நடத்த தடையில்லை!
நீட் தேர்வு தொடர்பான வழக்கில் கவுன்சிலிங் நடத்த இடைக்காலத் தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.மே மாதம் நடைபெற்ற நீட் தேர்வில் பல்வேறு முறைகேடுகள் நடந்துள்ளதாகக் கூறி மாணவர்கள் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், "நீட் குளறுபடி புகார்களால் தேர்வின் புனிதத் தன்மை மீது சந்தேகம் எழுந்துள்ளது. மருத்துவ கலந்தாய்வு நடத்த தடையில்லை" என்று உத்தரவிட்டது. மேலும், இந்த வழக்கு தொடர்பாக தேசிய தேர்வு முகமை பதிலளிக்க உத்தரவிட்டு நீட் குளறுபடி தொடர்பான அனைத்து வழக்குகளையும் ஜூலை 8-க்கு ஒத்திவைத்துள்ளது.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி