இரண்டு பிடி கருவேப்பிலை, 2 நெல்லிக்காய், சின்ன வெங்காயம் 10, செம்பருத்தி பூக்கள், ஒரு ஸ்பூன் வெந்தயம் ஆகியவற்றை நன்றாக அரைத்து பேஸ்ட் செய்து கொள்ளவும். பின்னர் இரும்பு வாணலி ஒன்றை வைத்து அதில் தேங்காய் எண்ணெய் ஊற்றி, சூடானதும் இந்த கலவையை கொட்டி நன்றாக வேக வைக்க வேண்டும். இந்த ஆயிலை 24 மணி நேரம் மூடி வைத்து, அடுத்த நாள் வடிகட்டி பயன்படுத்தலாம். வாரம் ஒரு முறை அல்லது இரு முறை பயன்படுத்தி வர முடி கருமையாக வளரும். இளநரை தடுக்கப்படும்.