பைக்கில் சென்று வாக்கு சேகரித்த நமிதா

77பார்த்தது
பைக்கில் சென்று வாக்கு சேகரித்த நமிதா
நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரம் இன்று மாலையுடன் முடிவடைகிறது. இதனால், அனைத்துக் கட்சி வேட்பாளர்களும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில், வட சென்னையில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் பால் கனகராஜை ஆதரித்து நடிகை நமிதா இன்று (ஏப்ரல் 17) பிரச்சாரத்தில் ஈடுபட்டார். தொடர்ந்து, இருசக்கர வாகனத்தில் பேரணியாக சென்று மக்களிடம் வாக்கு சேகரித்தார். நமிதாவை தொடர்ந்து பாஜக வேட்பாளர்களும் இருசக்கர வாகனத்தில் பின் தொடர்ந்து சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.

தொடர்புடைய செய்தி