அநியாய வரியை எதிர்த்த தீரன் சின்னமலை - ஸ்டாலின் புகழாரம்

74பார்த்தது
அநியாய வரியை எதிர்த்த தீரன் சின்னமலை - ஸ்டாலின் புகழாரம்
விடுதலை போராட்ட வீரர் தீரன் சின்னமலையின் 268வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. இந்த நிலையில், முதல்வர் மு.க. ஸ்டாலின் தனது சமூகவலைத்தள பக்கத்தில், ஓடாநிலையில் கோட்டை கட்டிப் போராடிய இணையற்ற போராளி, சமூக ஒற்றுமையின் சின்னம்! ஆங்கிலேயர்களுக்குச் சிம்மசொப்பனமாகத் திகழ்ந்த நம் மண்ணின் ஒப்பற்ற உரிமை வீரர் தீரன் சின்னமலை அவர்களின் பிறந்தநாள்! சென்னிமலைக்கும் சிவன்மலைக்கும் இடையே தோன்றி, ஆங்கிலேயரின் அநியாய வரியைப் பறித்து மக்களுக்கு அளித்த சின்னமலை அவர்களின் பிறந்தநாளில், இந்தியாவைக் காக்க உறுதியேற்போம்! என்று குறிப்பிட்டுள்ளார் .

தொடர்புடைய செய்தி