மன்சூர் அலிகான் மருத்துவமனையில் அனுமதி

68பார்த்தது
மன்சூர் அலிகான் மருத்துவமனையில் அனுமதி
வேலூர் நாடாளுமன்ற தொகுதியில் சுயேட்சையாக பலாப்பழ சின்னத்தில் இந்திய புலிகள் ஜனநாயக கட்சி தலைவர் நடிகர் மன்சூர் அலிகான் போட்டியிடுகிறார். இந்நிலையில் இன்று காலை வாணியம்பாடி, ஆம்பூர் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்டிருக்கும்போது திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் அவரை குடியாத்தத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். மேலும் அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். இன்று மாலை 6மணியுடன் தேர்தல் பிரச்சாரம் நிறைவடைய உள்ள நிலையில் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தொடர்புடைய செய்தி