'இந்தியா' கூட்டணிக்கு ஆதரவாக நேற்றுடன் (ஏப்ரல் 16) தனது பிரசாரத்தை முடித்துக் கொண்ட கமல்ஹாசன், திமுக கூட்டணிக்கு வாக்களிக்க வலியுறுத்தி எக்ஸ் தளத்தில் இன்று (ஏப்ரல் 17) காலை பதிவிட்டிருந்தார். இந்த நிலையில், இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படம் ஒன்றை வெளியிட்டு, காலை உணவுக்கேற்ற அர்த்தமுள்ள வரிகள் என்று கவிதை ஒன்றை கமல்ஹாசன் பதிவிட்டுள்ளார். அந்த பதிவில், "காலை பசியாறுகையில் கனைகுரல் பல்லியொன்று கட்டியம் கூறக்கேட்டேன் செக்கச் சிவந்து கிழக்கு வெளுக்க தெக்கும் வடக்கும் அகக்கண் திறக்கும் தேடிவரும் நாளை நமதே என்று" எனப் பதிவிட்டுள்ளார்