கலப்பட டீசல் விற்பனை அரசு தடுத்து நிறுத்த வேண்டும். தவறினால் நீதிமன்றத்தை நாடுவது என ரிக் உரிமையாளர்கள் சம்மேளன கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
தமிழ்நாடு ரிக் வாகன உரிமையாளர்கள் சம்மேளன பொதுக்குழு கூட்டம் சங்க வளாகத்தில் நடைபெற்றது. கூட்டத்துக்கு மாநில சம்மேளனத் தலைவரும் திருச்செங்கோடு ரிக் லாரி உரிமையாளர்கள் சங்கத் தலைவருமான எஸ். எஸ். சுரேஷ் தலைமை வகித்தார். ஒருசிலர் அரசால் அனுமதிக்கப்படாத பயோ டீசலை எரிபொருளாக பயன்படுத்தி ரிக் லாரிகளை இயக்குகின்றனர்.
இவர்கள் போர்வெல் போடுவதற்கு கட்டணத்தைக் குறைத்து வசூலிப்பதால் மற்ற ரிக் வாகன உரிமையாளர்கள் பாதிக்கப்படுகின்றனர். எனவே, சம்மேளனம் நிர்ணயிக்கும் கட்டணத்தில் மட்டுமே ஆழ்குழாய்க் கிணறுகள் அமைக்க லாரிகளை இயக்க வேண்டும்.
பயோடீசல் என்ற பெயரில் கலப்பட டீசலை பயன்படுத்தி ரிக் லாரிகளை இயக்கக்கூடாது. இந்த விஷயத்தில் மற்ற லாரி உரிமையாளர்களுக்கு இழப்பை ஏற்படுத்துவோர் மீது சம்மேளனம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உறுப்பினர்கள் வலியுறுத்தினர்.