திருச்செங்கோட்டில் திமுக பிரச்சார பொதுக்கூட்டம்

70பார்த்தது
திருச்செங்கோட்டில் திமுக பிரச்சார பொதுக்கூட்டம்
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு சட்டமன்ற தொகுதியில் உள்ள வேலகவுண்டம்பட்டி ஊராட்சி தொண்டிபட்டியில் திமுக மாபெரும் பிரச்சார பொதுக் கூட்டம் நடைபெற்றது.

இதில் அமைச்சர் மதிவேந்தன், நாமக்கல் மேற்கு மாவட்ட செயலாளர் மதுரா செந்தில் மற்றும் பலர் இந்தியா கூட்டணியின் வேட்பாளர் மாதேஸ்வரனை அவர்களுக்கு உதயசூரியன் சின்னத்திற்கு வாக்குகளை கேட்டு, திராவிட மாடல் அரசின் மூன்றாண்டு வியத்தகு சாதனைகளை கூறி வாக்கு சேகரித்து வந்தார்கள்.

இதில் உடன் முன்னாள் மாவட்ட கழக செயலாளர் KS. மூர்த்தி, ஒன்றிய கழக செயலாளர் தங்கவேல் உள்ளிட்ட நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.