புதன் சந்தை பகுதியில் ஒவ்வொரு செவ்வாய்க்கிழமை காலை முதல் மாலை வரை மாட்டு சந்தை நடைபெறுவது வழக்கம் நேற்று நடைபெற்ற மாட்டு சந்தையில் கேரளா மாநிலத்திலிருந்து ஏராளமான வியாபாரிகள் வந்திருந்ததால் மாடுகளின் விற்பனை அதிகபடியாக நடைபெற்றது நேற்று ஒரு நாள் மட்டும் சுமார் 2. 70 கோடி ரூபாய்க்கு மாட்டு சந்தையில் வர்த்தகம் நடைபெற்றது ஏராளமான விவசாயிகள் தங்கள் வளர்க்கும் மாடுகளை இங்கு விற்பனைக்கு கொண்டு வந்தனர்