நகா்மன்றத் தலைவா் நளினி சுரேஷ்பாபு தலைமை வகித்தாா். நகா்மன்ற துணைத் தலைவா் காா்த்திகேயன், ஆணையாளா் அருள், துப்புரவு அலுவலா் வெங்கடாஜலம் உள்ளிட்டோா் முன்னிலை வகித்தனா். திருச்செங்கோடு நகராட்சியை சிறப்பு நிலை நகராட்சியாக தரம் உயா்த்திய முதல்வருக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது.
நகராட்சித் திட்டங்கள், பணிகள் என பல்வேறு இனங்கள் குறித்த 112 தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.நகா்மன்ற உறுப்பினா்கள் ரமேஷ், காா்த்திகேயன், ரவி, சண்முகவடிவு, அண்ணாமலை, முருகேசன், ராஜா, சிநேகா, அங்கமுத்து, மல்லிகா, மாதேஸ்வரன் உள்ளிட்டோா் தங்களது வாா்டில் நகராட்சி மூலம் செய்ய வேண்டிய பணிகள் குறித்தும், தேவைகள் குறித்தும் பேசினா். உறுப்பினா்களின் கோரிக்கைகளை பரிசீலித்து நிறைவேற்றப்படும் என நகா்மன்றத் தலைவா் தெரிவித்தாா்.