வட்ட அளவிலான ஆண்கள் கபடி போட்டி

68பார்த்தது
வட்ட அளவிலான ஆண்கள் கபடி போட்டி
கொல்லிமலையில் நடந்த வட்ட அளவிலான ஆண்கள் கபடி போட்டியை பொன்னுசாமி எம்எல்ஏ தொடங்கி வைத்தார். கொல்லிமலை அருகே எடப்புளிநாடு ஊராட்சி. செங்கரை ஏகலைவா மாதிரி உண்டி உறைவிட மேல்நிலை பள்ளியில், பள்ளிக்கல்வி துறையின் சார்பில், சேந்தமங்கலம் குறுவட்ட அளவிலான 14 வயதிற்குட்பட்ட மாணவர்களுக்கான கபடி போட்டி நடந்தது. இதில் கொல்லிமலை, சேந்தமங்கலம் வட்டத்திற்கு உட்பட்ட தனியார் மற்றும் அரசு பள்ளிகளை சேர்ந்த 28 அணிகள் கலந்து கொண்டனர்.

போட்டி தொடக்க விழா பள்ளி வளாகத்தில் நடந்தது. இந்நிகழ்ச்சிக்கு வட்டார அட்மா குழு தலைவர் செந்தில்முருகன் தலைமை வகித்தார். பழங்குடியினர் நல அலுவலர் பீட்டர் ஞானராஜ் முன்னிலை வகித்தார். முன்னதாக, பள்ளியின் தலைமை ஆசிரியர் சுமதி வரவேற்று பேசினார். இதில் சேந்தமங்கலம் எம்எல்ஏ பொன்னுசாமி கலந்து கொண்டு, போட்டியை தொடங்கி வைத்து, வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசு மற்றும் வெற்றி கோப்பைகளை வழங்கினார். இந்நிகழ்ச்சியில், மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் சுகந்திரதேவி, உடற்கல்வி ஆசிரியர்கள் ஜெயந்தி, சரவணன், செல்வராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி