மாசிமக தேர்களை தயார் செய்யும் பணி தீவிரம்

82பார்த்தது
மாசிமக தேர்களை தயார் செய்யும் பணி தீவிரம்
சேந்தமங்கலத்தில் லட்சுமி நாராயண பெருமாள் கோயில் மாசி மக தேரோட்டத்தையொட்டி, தேர்களை தூய்மைப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது.

சேந்தமங்கலம் பழைய பஸ் நிலையம் அருகே, பிரசித்தி பெற்ற லட்சுமி நாராயண பெருமாள் கோயில் உள்ளது. ஆண்டுதோறும் மாசி மக தேரோட்டம் வெகு விமர்சியாக நடைபெறும். சுற்றுப்பகுதியில் இருந்து ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்வர். இதையொட்டி இரண்டு நாள் தேரோட்டம் நடைபெறுவது வழக்கம்.

லட்சுமி நாராயண பெருமாளுக்கு சொந்தமான பெரிய தேரோட்டம், சோமேஸ்வரருக்கு சொந்தமான சின்ன தேரோட்டம் என நடைபெறுவது வழக்கம். தேர் திருவிழா வருகிற 24, 26ம் தேதிகளில் நடைபெற உள்ளது. இதற்காக இரண்டு தேர்களையும் தூய்மைப்படுத்தும் பணியில், ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இதற்காக பாதுகாப்பு கூடாங்களில் இருந்து தேர்களை வெளியே கொண்டு வந்து நிறுத்தி, அதனை சுத்தப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளனர். அலங்கார தோரணங்கள் கட்டும் பணி நடைபெற்று வருகிறது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி