வெண்ணந்தூர் வட்டாரத்தில் 15வயதுக்கு மேற்பட்ட 60க்குட்பட்ட கல்லாதவர்களின் விவரங்கள் ஒன்றியத்தில் உள்ள ஒவ்வொரு குடியிருப்பு வாரியாக புள்ளி விவரங்கள் சேகரிக்கப்பட்டது.
இதன் முதல் கட்டமாக ஒன்றியத்தில் உள்ள 898பேர் கல்லாதவர்கள் விவரங்கள் பள்ளி தலைமையாசிரியர், ஆசிரியர் பயிற்றுநர்கள் மற்றும் ஆசிரியர்கள் மூலம் சேகரிக்கப்பட்டு உறுதிசெய்யப்பட்டது.
இக்கல்லாதவர்களுக்கு, 46மையங்கள் சம்பந்தப்பட்ட பள்ளிகளில் தோற்றுவிக்கப்பட்டு தன்னார்வகளின் உதவியுடன் கற்றல் கற்பித்தல் பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது. இவ்வகுப்பானது, ஜூலை 15 முதல் நவம்பர் முதல் வாரம் வரை நடைபெற உள்ளது. மேலும் இரண்டாம் கட்ட வகுப்பிற்கான புள்ளி விவரங்கள் சேகரிப்பு பணி நடந்து வருகின்றது.