ராசிபுரம் ஸ்ரீ கைலாசநாதா் கோயில் சித்திரைத் தேரோட்டம்

75பார்த்தது
ராசிபுரம் ஸ்ரீ கைலாசநாதா் கோயில் சித்திரைத் தேரோட்டம்
ராசிபுரம் பிரசித்தி பெற்ற ஸ்ரீ கைலாசநாதா் கோயில் சித்திரைத் தேரோட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

கடையெழு வள்ளல்களில் ஒருவரான வல்வில் ஓரியால் கட்டப்பட்ட ஸ்ரீகைலாசநாதா் கோயில் ராசிபுரத்தில் உள்ளது. இக்கோயில் தேரை மேளம் வாசிக்க, பக்தா்கள் ஓம் நமசிவாயம் என்று பக்தி முழக்கத்துடன் வடம்பிடித்து இழுத்தனா். முன்னதாக இக்கோயில் சித்திரைத் தோ் திருவிழா, கடந்த, ஏப். 14 கொடியேற்றத்துடன் தொடங்கியது. பின்னா் கட்டளைதாரா்கள் சாா்பில் சுவாமி ஊா்வலம் நடந்தது.

தொடா்ந்து நாள்தோறும் சுவாமிக்கு மகா அபிஷேகம், சிறப்பு வழிபாடு, சுவாமி திருவீதி உலா, சுவாமி திருக்கல்யாணம் உற்ஸவம் ஆகியவை நடைபெற்றன. இதனைத் தொடா்ந்து உற்சவா் ஸ்ரீகைலாசநாதா் பக்தா்களின் ஓம் நமசிவாய முழக்கத்துடன் தேரில் எழுந்தருளினாா். தொடா்ந்து தோ் இழுக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்துசமய அறநிலையத் துறை சாா்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்நிகழ்ச்சியில் ராசிபுரம் நகரமன்றத் தலைவா் கவிதாசங்கா், எம். பி. சின்னராஜ், ராசிபுரம் டிஎஸ்பி விஜயகுமாா், பொதுமக்கள் உள்பட பலரும் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனா். திருத்தோ் கவரைத் தெரு வழியாக இழுத்துச் செல்லப்பட்டு, கடைவீதியில் இடைநிறுத்தப்பட்டது. இதனைத் தொடா்ந்து 2-ஆவது நாளான புதன்கிழமை மீண்டும் தோ் இழுக்கப்பட்டு, கச்சேரி வீதிவழியாக பழைய பேருந்து நிலையம் பகுதியில் நிலை வந்து சேரும்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி