இராசிபுரம்: மக்கள் நலக் குழுவினர் போராட்டம்

68பார்த்தது
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் நகரப் பகுதியில் தற்போது செயல்படும் பேருந்து நிலையம் ஆனது எட்டு கிலோமீட்டர் தொலைவில் உள்ள அணைப்பாளையம் பகுதிக்கு இடமாற்றம் செய்து தீர்மான நிறைவேற்றப்பட்டுள்ளது.

தற்போது இந்த புதிய பேருந்து நிலையம் அமைவதற்கு பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்தும் கண்டனம் தெரிவித்தும் வருகின்ற நிலையில் தற்போது அனைபாளையம் ஏரி அருகில் பேருந்து நிலையம் அமைக்க கட்டுமான ஒப்பந்தத்தை இணையதளம் மூலம் கோரும் ராசிபுரம் நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து மக்கள் நலக் குழுவினர் கருப்பு பேட்ஜ் அணிந்து அறவழிப் போராட்டம் நடத்த முடிவு செய்து ராசிபுரம் புதிய பஸ் நிலையம் எம்ஜிஆர் சிலை அருகே நிர்வாகிகள் மற்றும் மக்கள் நல குழு உறுப்பினர்கள் என பலர் கருப்பு பேட்ஜ் அணிந்து அறவழி போராட்டம் நடத்தினர்.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி