நாமக்கல் மாவட்டம், இராசிபுரம் வட்டம், அணைப்பாளையம் பிரிவில், அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை அமைவுள்ள இடத்தில் இன்று (20. 02. 2024) மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச. உமா அவர்கள் தலைமையில் எம்பி ராஜேஷ்குமார் ரூ. 54 கோடி மதிப்பீட்டில் புதிய மருத்துவமனை கட்டடம் அடிக்கல் நாட்டு விழா முன்னேற்பாடு பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.
இந்த ஆய்வின்போது இராசிபுரம் நகர்மன்ற தலைவர் முனைவர் கவிதா சங்கர், மாவட்ட மாணவர் அணி அமைப்பாளர் சத்யசீலன், நாமக்கல் வருவாய் கோட்டாட்சியர் (பொ) முத்துராமலிங்கம், இணை இயக்குநர் மருத்துவ பணிகள் ராஜ்மோகன், துணை இயக்குநர் சுகாதார பணிகள் பூங்கொடி, பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் சச்சிதாநந்தம் உட்பட துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.