கபிலர்மலை: கல்லூரி மாணவி தூக்கு போட்டு தற்கொலை
கபிலர்மலை அருகே அமைந்துள்ள கந்தம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் ராஜேஸ்வரி. இவரது மகள் சுதா பாண்டமங்கலம் பகுதியில் உள்ள அரசு கல்லூரியில் இரண்டாம் ஆண்டு பட்டப்படிப்பு படித்து வருகிறார். நேற்று (நவ.22) மாலை வீட்டில் தனியாக இருக்கும்போது தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். உடலை கைப்பற்றிய காவல்துறையினர் பிரதேச பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.