பரமத்திவேலூர் சுற்றுவட்டார எட்டுப்பட்டி கிராம மக்களின் நம்பிக்கை தெய்வமாக விளங்கும் ஶ்ரீ மகமாரியமனுக்கு கடந்த 2009 ஆம் ஆண்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. அதன்பிறகு 12 ஆண்டுகள் கடந்துள்ள நிலையில், தற்போது மூலஸ்தானம், கோபுரம் பரிவார தெய்வ கோபுரங்கள் மற்றும் அம்மனுக்கு திருப்பணிகள் செய்து கும்பாபிஷேக விழா நடத்தப்பட்டது.
கும்பாபிஷேகம் முக்கிய நிகழ்வான இன்று(செப்.8) ஞாயிற்றுக்கிழமை அதிகாலை ஆறாம் கால யாக பூஜையும் தொடர்ந்து யாகசாலைக்கு பூர்ணா கதி நடைபெற்றது. இதன் பின்னர் செல்வ விநாயகர் ஆலயம் கும்பாபிஷேகம் நடைபெற்றது. அப்பொழுது எட்டுப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் ஓம் சக்தி பராசக்தி என்ற பக்தி பரவசத்துடன் கொசமிட்டு வழிபட்டனர். இதனைத் தொடர்ந்து மூலஸ்தானம் மாரியம்மன், செல்வ விநாயகர், பாலமுருகன், ஆஞ்சநேயர் சுவாமி ஆகிய சுவாமிகளுக்கு மகா அபிஷேகம், சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. பக்தர்கள் வணங்கி வழிபட்டுச் சென்றனர். அதன் பின்னர் பொதுமக்களுக்கு அன்னதானம், பிரசாதம் வழங்கும் நிகழ்ச்சிகளும் நடைபெறுகிறது. கும்பாபிஷேக விழாவிற்கான ஏற்பாடுகளை எட்டுப்பட்டி தர்மகர்த்தாக்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்து வருகின்றனர்.