நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில், திருச்செங்கோட்டில் இருந்து இரண்டு சக்கர வாகனத்தில் மண்டக்காபாளையம் பகுதிக்கு விக்னேஷ் என்பவர் நேற்று இரவு வந்து கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக சென்ற பேருந்தை முந்தி செல்லும்போது எதிர் திசையில் வந்த ஆட்டோ மோதியதில் விக்னேஷ் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலே பலியானார். இது குறித்து திருச்செங்கோடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் பலியான விக்னேஷ் உடலை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்கள்.