நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் பேருந்து நிலையம் அருகே புகழ்பெற்ற ஸ்ரீ பஞ்சமுக விநாயகர் கோவில் அமைந்துள்ளது. விநாயகர் சதுர்த்தி முன்னிட்டு தொடர்ந்து மூன்றாவது நாளாக இன்று(செப்.9) காலை சாமிக்கு வாசனை திரவியம் கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. இதையடுத்து 500 லிட்டர் பால் அபிஷேகம் செய்யப்பட்டு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. இதில் ஏராளமான பொதுமக்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் சென்றனர்.