நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இன்று விவசாயிகள் குறைதீர்க்க கூட்டம் நடைபெற்றது இந்த கூட்டத்திற்கு மாவட்ட ஆட்சித் தலைவர் உமா தலைமையில் நடைபெற்றது. இதில் சிப்காட் எதிர்ப்பு இயக்கத்தினர் கலந்து கொண்டு எங்கள் பகுதியில் சிப்காட் அமைக்க கூடாது என எதிர்ப்பு தெரிவித்து திடீரென பெண்கள் தரையில அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது..