பரமத்தி வேலூரில் ரூ. 11 லட்சத்துக்கு கொப்பரை ஏலம்

57பார்த்தது
பரமத்தி வேலூா் வெங்கமேட்டில் உள்ள மின்னணு தேசிய வேளாண்மை சந்தையில் தேங்காய் கொப்பரை ஏலம் நடைபெற்றது.

வியாழக்கிழமை (ஏப். 4) நடைபெற்ற ஏலத்துக்கு 12 ஆயிரத்து 80 கிலோ கொப்பரையை விவசாயிகள் கொண்டு வந்திருந்தனா். இதில் அதிகபட்சமாக கிலோ ரூ. 93. 20-க்கும், குறைந்தபட்சமாக ரூ. 88. 19-க்கும், சராசரியாக ரூ. 91. 70-க்கும் ஏலம் போனது. இரண்டாம் தர கொப்பரை அதிகபட்சமாக ரூ. 76. 29-க்கும், குறைந்தபட்சமாக ரூ. 68. 99-க்கும், சராசரியாக ரூ. 70- க்கும் ஏலம் போனது. மொத்தம் ரூ. 11 லட்சத்து 10 ஆயிரத்து 959-க்கு வா்த்தகம் நடைபெற்றது.

தொடர்புடைய செய்தி