மக்களவை தொகுதி வேட்பாளர் மனு நிராகரிப்பு

73பார்த்தது
மக்களவை தொகுதி வேட்பாளர் மனு நிராகரிப்பு
மக்களவைத் தேர்தலில் மத்தியப் பிரதேசத்தில் வெள்ளிக்கிழமை சமாஜ்வாதி கட்சி (எஸ்பி) பின்னடைவைச் சந்தித்தது. கஜுராஹோ மக்களவைத் தொகுதியில் சமாஜவாதி வேட்பாளர் மீரா யாதவின் வேட்புமனு நிராகரிக்கப்பட்டது. இதற்கு சமாஜ்வாதி கட்சியின் தேசிய தலைவர் அகிலேஷ் யாதவ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து நீதி விசாரணை நடத்த வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். மீரா யாதவின் வேட்புமனுவை ரத்து செய்தது ஜனநாயகத்தின் வெளிப்படையான கொலை என சமாஜ்வாடி கட்சி தரப்பில் கருத்து தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி