குமாரபாளையத்தில் புகையிலை பொருட்கள் விற்பனை செய்த நபருக்கு குண்டர் சட்டத்தில் வழக்குப்பதிவு செய்தனர்.
கடந்த ஜூலை 9ல், குமாரபாளையம் ஆனங்கூர் ரோடு சுந்தரம் காலனியில் குடியிருந்து வந்தவர் ராஜசிங், 20. குமாரபாளையம் சேலம் மெயின் ரோட்டில் சாமி ஸ்டோர் என்ற பெயரில் மளிகை ஸ்டோர் நடத்தி வந்தார். மளிகை ஸ்டோர் மேல் மாடியில் தங்குவதற்கான அறையில், இரகசிய தகவலின் பேரில் குமாரபாளையம் போலீசார் சோதனை செய்து பார்த்தனர். தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் பான்பராக் பாக்கெட்டுகள் சுமார் 75 கிலோ விற்பனைக்கு வைத்திருந்த்து கண்டுபிடிக்கப்பட்டது. இது குறித்து வழக்குப்பதிவு செய்து, கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைக்கப்பட்டார். தற்போது நாமக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜேஷ்கண்ணா பரிந்துரையின்படி நாமக்கல் மாவட்ட கலெக்டர் உமா உத்தரவின் பேரில், குண்டர் சட்டத்தில் சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.