பள்ளிபாளையம் அடுத்துள்ள மண்கரடு என்ற பகுதியில் , ஜலகண்டீஸ்வரர் என்பவர் மது அருந்தி கொண்டிருந்த பொழுது பள்ளிபாளையத்தை சேர்ந்த ஏழு பேர் முன்பகை காரணமாக, ஜலகண்டேஸ்வரரை அடித்து உதைத்துள்ளனர். இதுகுறித்து ஜலகண்டேஸ்வரன் அளித்த புகாரின் அடிப்படையில் பள்ளிப்பாளையத்தை சேர்ந்த சங்கர், விக்னேஷ் , கார்த்தி, அரவிந்த், கார்த்திகேயன், சக்திவேல், நாகராஜன் ஆகிய ஏழு பேரை போலீசார் இன்று கைது செய்தனர்.