ஆட்டோ ஓட்டுனர் மீது கொலை வெறி தாக்குதல்

68பார்த்தது
பள்ளிபாளையம் ராஜா வீதி பகுதியில் வசிப்பவர் ஜலகண்டேஸ்வரன் ஆட்டோ ஓட்டுனரான இவர் நேற்று மாலை தனது நண்பர்கள் மணிகண்டன் லட்சுமணன் ஆகியோர் உடன் பள்ளிபாளையம் அருகே உள்ள மண்கரடு என்னும் பகுதியில் உள்ள அரசு மதுபான கடையில், மது பாட்டில்களை வாங்கிக் கொண்டு எதிரே உள்ள காலி நிலத்தில் அமர்ந்து மது அருந்திக் கொண்டிருந்தனர். அப்பொழுது அங்கு வந்த மணிகண்டனின் மைத்துனர் சங்கர் மற்றும் அவரது நண்பர்கள் ஜலகண்டேஸ்வரனிடம் தனது அக்கா மணிகண்டனுடன் வாழ விடாமல் தடுப்பது நீதான் என கூறி ஜலகண்டேஸ்வரனை தகாத வார்த்தைகளில் பேசி கைகளால் தாக்கியுள்ளார். மேலும் சங்கர் மற்றும் அவருடைய நண்பர்கள் அருகில் இருந்த விவசாய நிலத்தில் கரும்புகளை பிடுங்கி சரமாரியாக ஜலகண்டேஸ்வரனை தாக்கியுள்ளனர். இதனை அடுத்து பள்ளிபாளையம் அரசு மருத்துவமனையில் உயிருக்கு ஆபத்தான நிலையில் ஜலகண்டேஸ்வரன் சிகிச்சை பெற்று வருகிறார்.
இது குறித்து தகவல் அறிந்த பள்ளிபாளையம் போலீசார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த ஜலகண்டேஸ்வரனிடம் புகாரினை பெற்று அவரை தாக்கிய சங்கர் மற்றும் அவரது நண்பர்களான விக்னேஷ் , கார்த்தி, அரவிந்த், கார்த்திகேயன், சக்திவேல் மற்றும் நாகராஜ் உள்ளிட்ட ஏழு நபர்களை கைது செய்து, ஜலகண்டேஸ்வரனை கொலை செய்யும் நோக்கத்துடன் தாக்கியதாக வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி